டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் இன்று வழக்கமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது வழக்கு விசாரணைக்கு பிரபல ரவுடி ஜிதேந்தர் கோகி ஆஜரானார். அப்போது மர்மநபர்கள் திடீரென கோர்ட்டு வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
வழக்கறிஞர்கள் உடையில் வந்திருந்த 2 பேர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் ரவுடி ஜிதேந்தர் கோகி உயிரிழந்துள்ளர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரவுடிகள் மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.
கோர்ட்டு வளாகத்தில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.