2 டோஸ் தடுப்பூசி செலுத்தியும் சோகம் -25% சுகாதார ஊழியர்களுக்கு டெல்டா பாதிப்பு: ஆய்வில் தகவல்

SHARE

இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியும் டில்லியில் உள்ள சுகாதாரத் துறை ஊழியர்களில் 25 சதவீதத்துக்கு மேற்பட்டோருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் மையமும் , டில்லி மேக்ஸ் மருத்துவனையும் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவுகள் குறித்து, கருத்து தெரிவித்த ஐஜிஐபி அமைப்பின் மூத்த விஞ்ஞானி ஷாந்தனு சென்குப்தா
இரு டோஸ் கோவிட் தடுப்பூசிகளும் செலுத்திய புதுடில்லி சுகாதார ஊழியர்கள் 95 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். தடுப்பூசி செலுத்திய பின், 45 – 90 நாட்கள் இடைவெளியில், அவர்களிடம் தொற்றின் தாக்கம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோரின் ரத்தப் பகுப்பாய்வில், இரு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்ட, ஏற்கெனவே தொற்றால் பாதிக்கப்படாத சுகாதார ஊழியர்களில் 25 சதவீதம் பேர் புதிதாக டெல்டா ரக கோவிட் தொற்று பாதிப்புக்கு உள்ளானது கண்டறியப்பட்டது. எனவே, தடுப்பூசி செலுத்தியோரிடமும் டெல்டா ரக கோவிட் தொற்று ஏற்படுவது உறுதியாகி உள்ளது.
பாதிப்புக்கு ஆளானாலும், கோவிட் தொற்றின் தீவிர பாதிப்பு அவர்களிடம் காணப்படவில்லை; தீவிர காய்ச்சலும் ஏற்படவில்லை என்றார். தொற்று பாதிப்பைத் தடுக்க முகக்கவசம் அணிவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment