எம்.எஸ். தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை நேற்று வெளியிட்டார்.
தோனியின் ஓய்வு அறிவிப்பினால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்து உள்ளனர்.
இந்தியா தவிர்த்து அடில் தாஜ் என்ற பாகிஸ்தானிய ரசிகர் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
அதில், அன்பிற்குரிய தோனி அவர்களே. நீங்கள் ஒரு சில நிமிடங்களே வந்து செல்லும் கவிஞர் அல்ல. நீங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும் கிரிக்கெட் வீரர். நீங்கள் குறிப்பிடத்த புகழ் வாய்ந்தவர். எங்களது நாயகன். எங்களுடைய இதயங்களில் இருந்து நீங்கள் ஓய்வு பெற முடியாது என்று தாஜ் தெரிவித்து உள்ளார்.
, நம்பகத்திற்குரிய விளையாட்டு வீரர் அல்லது நல்ல கேப்டன் என்பதற்காக மட்டுமின்றி அனைவரையும் சம அளவில் வைத்து காண்பவர். பெரிய சாதனைகளை படைத்த பின்னரும், எதுவும் செய்து விடவில்லை என்பது போல் எளிமையாக செயல்படுபவர் என்பதால் தங்களை கவர்ந்தவர் தோனி என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மிக பெரிய மனிதர். பாகிஸ்தானில் அவரை பின்தொடரும் ரசிகர்கள் ஏராளம். எனது தந்தையும் அவரது தீவிர ரசிகர். துபாயில் தோனியின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்திற்கு நாங்கள் இருவரும் முதல் நாள் முதல் காட்சிக்கு சென்றோம். அவருடைய இடம் ஒருபோதும் மீண்டும் பூர்த்தி செய்யப்படாது என தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை பரம எதிரிகள் இருவருக்கு இடையே நடைபெறும் போராக, ரசிகர்கள் உன்னிப்புடன் கவனிக்கும் சூழல் ஒரு புறம் இருக்க, இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு பாகிஸ்தானில் இருந்து ரசிகர் ஒருவர் உருக்கமான வாழ்த்து தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களை நெகிழ்சியடைய செய்துள்ளது