8 மாதங்களில் திமுக ஆளுங்கட்சி : ஸ்டாலின்

SHARE

திமுக பொதுக்குழு கூட்டம் முதன்முறையாக காணொலி காட்சி வாயிலாக, இன்று நடைபெற்றது.காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 3500க்கும் மேற்பட்டோர் காணொலி மூலம் பங்கேற்றனர். .கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்களிடையே பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்,இன்னும் எட்டு மாதங்களில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக தி.மு.க., மாறும் என்றார்
துரைமுருகன் டிஆர் பாலுவை பார்க்கும் போது, கருணாநிதியின் முகம்தான் எனக்கு தெரிகிறது. என்றார்.. 9 முறை எம்எல்ஏ வாகி சூப்பர் ஸ்டாராக துரைமுருகன் திகழ்கிறார்எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதிமுக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது. அனைத்திலும் லஞ்சம், ஊழல் பெருகிவிட்டது என தெரிவித்த ஸ்டாலின்,.. தமிழகத்திற்கு 4.4 லட்சம் கோடி கடன் உள்ளது என்றார். இதனை சாதனை என்கின்றனர். இப்படிப்பட்ட அதிமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். உங்கள் ஆசை 8 மாதங்களில் நிறைவேறும். என தொண்டர்கள் மத்தியில் அவர் பேசினார்.

இந்தியாவிலேயே மாநில கட்சி ஒன்று இது போன்று ஆயிரக்கணக்கானவர்களை ஆன் லைன் மூலம் இணைத்து 5 மணி நேரத்திற்கு மேல் எந்த வித பிரச்சனைகளும் இன்று கூட்டம் நடத்தியது இதுவே முதன் முறை.

இதில் ராணிப்பேட்டை மாவட்ட திமுக செய்திருந்த ஏற்பாடுகள் மற்றும் அவர்களது கானொளி காட்சிகள் ,சிறப்பாக இருந்ததாக, தலைமையகமான அண்ணா அறிவாலையத்தில் பங்கேற்ற மூத்த உறுப்பினர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.


SHARE

Related posts

Leave a Comment