விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: தமிழகத்தில் அமல்

SHARE

மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கில் மிக கடுமையாக பின்பற்றப்படும் நடவடிக்கையாக இ-பாஸ் நடைமுறை பார்க்கப்பட்டது. மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு முதலில் அறிவித்தது.

பணம் வாங்கிக்கொண்டு இ-பாஸ் வழங்கும் வேலையில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், இடைத்தரகர்கள் சிலர் சமீபத்தில் கைது செய்யப்பட்டதும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் இ-பாஸ் நடைமுறையில் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். எப்படி விண்ணப்பித்தாலும் இ-பாஸ் கிடைக்காது என்பதே மக்களின் எண்ணமாக இருந்தது.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 14-ந்தேதி ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில், “தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே முக்கிய காரணங்களுக்காக மக்கள் தடையின்றி பயணிக்க 17-ந்தேதி (இன்று) முதல் ஆதார் அல்லது ரேஷன் அட்டை விவரங்களுடன் தொலைபேசி எண்ணையும் சேர்த்து விண்ணப்பித்தால் எந்தவித தாமதமும் இல்லாமல் உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்படும்.

இதனை தொடர்ந்து இ-பாஸ் தளர்வு இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வந்தது. 

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர தற்போதுள்ள இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


SHARE

Related posts

Leave a Comment