மலை பகுதிகளுக்கு செல்வோருக்கு இ ரிஜெஸ்டிரேசன் அவசியம் : தமிழக அரசு

SHARE

வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் மற்றும் மலைபகுதிகளுக்கு பயணிப்போருக்கு இ ரெஜிஸ்ட்ரேசன் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது

மாநிலங்களுக்கிடையே பயணிப்போரிடம் இபாஸ் பெறப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என எழில்நதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இது குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.


இதனையடுத்து தமிழக அரசு பதில் மனுவில் மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் மற்றும் மலைபகுதிகளுக்கு பயணிப்போரிடம் இ ரெஜிஸ்ட்ரேசன் மூலம் அவர்களின் விவரங்கள் கட்டாயம் பெறப்படுகிறது என விளக்கம் அளித்தது. இதனையடுத்து ஐகோர்ட் வழக்கை முடித்து வைத்தது.


SHARE

Related posts

Leave a Comment