டெஸ்லா’ நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், இரண்டே நாட்களில் கிட்டத்தட்ட 3.70 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளார். ‘புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ்’ வரலாற்றில், இரண்டே நாட்களில் இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்த முதல் நபராகி இருக்கிறார், எலான் மஸ்க்.
இதற்கு முன் ‘அமேசான்’ நிறுவனர் ஜெப் பெசோஸ், தன்னுடைய மனைவி மெக்கன்சி ஸ்காட்டை 2019ல் விவாகரத்து செய்தபோது, கிட்டத்தட்ட 2.66 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தார். இப்போது அதைவிட அதிக இழப்பை எலான் மஸ்க்
சந்தித்துள்ளார்.
லான் மஸ்க், தன்னுடைய சொத்து மதிப்பில் இவ்வளவு பெரிய தொகையை இழக்க காரணமாக இருந்தது, டுவிட்டரில் அவர் கேட்ட கேள்வி ஒன்று தான்.
கடந்த வார இறுதியில், தன்னுடைய டுவிட்டரில், டெஸ்லா நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்கலாமா என தன்னை பின்தொடர்பவர்களிடம் கேட்டிருந்தார், எலான் மஸ்க்.
இதற்கிடையே, எலான் மஸ்கின் இந்த டுவிட்டர் வாக்கெடுப்புக்கு முன்னதாக, அவரது சகோதரர் கிம்பல் தன்னுடைய பங்குகளை விற்றதும் சந்தையில், டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் விலையில் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, தன்னுடைய தனிப்பட்ட கடனை அடைக்கவே, பங்குகளை எலான் மஸ்க் விற்க விரும்புகிறார் என்றும் செய்திகள் வந்தன.இது போன்ற காரணங்களால், டெஸ்லா நிறுவன பங்குகள் விலை சரிந்து, பெரும் இழப்பை சந்தித்துள்ளார், எலான் மஸ்க்.