இங்கிலாந்தில் துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலி ..கொலையாளி தற்கொலை

SHARE

இங்கிலாந்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 வயது சிறுவன் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.‌

துப்பாக்கி சூடு நடத்திய அந்த நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.பதிவு:

நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரமான பிளைமவுத் நகரம் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
.

அங்குள்ள கீஹாம் என்ற‌ இடத்தில் சாலையில் மக்கள் நடந்து கொண்டிந்தனர். அப்போது அங்கு கையில் துப்பாக்கியுடன் வந்த நபர் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. மக்கள் அனைவரும் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் அந்த மர்ம நபர் சற்றும் ஈவு இரக்கமின்றி கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல் சுட்டு தள்ளினார்.
இதில் 3 பெண்கள் மற்றும் 10 வயது சிறுவன் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர்.‌

மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதனிடையே இந்த தாக்குதல் பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் போலீசார் வருவதற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த மர்ம நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து அந்த பகுதியை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்த போலீசார் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


SHARE

Related posts

Leave a Comment