மோடியுடன் எடப்பாடி பழனிசாமி தனியாக சந்திப்பு

SHARE

சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற  அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.  விழா முடிவில் பிரதமர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் கைகளை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
 பின்னர், நேரு விளையாட்டரங்கில் தமிழக முதல்வர் பழனிசாமியை பிரதமர் மோடி தனியாக சந்தித்து பேசினார். சுமார் 10 நிமிடங்கள் நீடித்த இந்த  இந்த ஆலோசனையின் போது துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உடன் இல்லை. அதிமுக- பாஜக கூட்டணி, தொகுதி பங்கீடு ஆகியவை குறித்து இருவரும் ஆலோசனை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 


SHARE

Related posts

Leave a Comment