வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், வரும், 8ம் தேதி, ‘பாரத் பந்த்’ நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கம் ஒன்றின் தலைவர் ஹரிந்தர் சிங் லகோவால் செய்தியாளர்களிடம் பேசிய போது ,மூன்று வேளாண் சட்டங்களையும், மத்திய அரசு திரும்ப பெறும் வரை, எங்கள் போராட்டம் தொடரும் என்றார்
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, நாடு முழுவதும், 8ம் தேதி, கடையடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளோம்.அன்று, டில்லிக்கு வரும் அனைத்து சாலைகளையும் முடக்கி, மறியலில் ஈடுபடுவோம். நாடு முழுதும் விவசாயிகள், சுங்கச் சாவடிகளில் மறியலில் ஈடுபட்டு, எந்த வாகனமும் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். சுங்க கட்டணம் வசூலிக்கவும் அனுமதிக்க மாட்டோம். எனவும், அவர் கூறினார்.