விவசாயிகள் போராட்டத்தால், ரயில்வேக்கு ரூ.2400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியவடக்கு ரயில்வே பொது மேலாளர் அசுதோஷ் கங்கல், பியாஸ்-அமிர்தசரஸ் நகரங்களுக்கான ரயில்வே போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. மாற்றுவழியில் ரயில்கள் இயக்கப்பட்ட போதும், பல ரயில்களை ரத்து செய்யும் சூழல் ஏற்பட்டது.
விவசாயிகளின் போராட்டத்தால் சரக்கு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்களும் நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. வடக்கு ரயில்வேக்கு ரூ.2,400 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.