உச்சநீதிமன்ற குழு – விவசாயிகள் நிராகரிப்பு.

SHARE

விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 9ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்ளை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் டில்லி எல்லையில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரச்னைக்கு தீர்வு காண விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு எட்டு சுற்று பேச்சு நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. 15ம் தேதி ஒன்பதாவது சுற்று பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் தலையிட்ட உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்தது.மேலும் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு மற்றும் விவசாயிகளுடன் பேச நான்கு பேர் அடங்கிய குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

இந்நிலையில் விவசாயிகளுடன் இன்று நடந்த ஒன்பதாவது சுற்று பேச்சில் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், திட்டமிட்டபடி விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்களுடன் மத்திய அமைச்சர்கள் பியூஷ்கோயல், நரேந்திர சிங் தோமர், சோம் பிரகாஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.


அப்போது உச்சநீதிமன்ற குழுவை நிராகரிப்பதாக தெரிவித்தனர். அதேபோல், வேளாண் சட்டத்தை திரும்ப பெற முடியாது என தெரிவித்தது. இந்த பேச்சிலும் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, . மீண்டும் 19ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த பேச்சு வார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் தோமர், மத்திய அரசு திறந்த மனதுடன் உள்ளது. விவசாயிகளின் சந்தேகங்களை தீர்க்க நாங்கள் முயற்சித்தோம். போராட்டம் முடிவுக்கு வர வேண்டும் என விரும்புகிறோம். விரைவில் தீர்வு ஏற்படும் என நம்புகிறோம். உச்சநீதிமன்றம், நாட்டின் உயரிய அமைப்பு. உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் எந்த மாதிரியான உத்தரவிற்கு கட்டுப்படுவோம். வரும் 19ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


SHARE

Related posts

Leave a Comment