இந்தியாவிலேயே மாநில அரசால் அமைக்கப்பட்ட முதல் மரபணு பகுப்பாய்வு மையம் – திறந்து வைத்தார் முதலமைச்சர்

SHARE

கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் மற்றும் அதன் தன்மை குறித்து முழு மரபணு பகுப்பாய்வு செய்யவும், குறிப்பாக டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவுதலை கண்டறிய உதவும் மரபணு பகுப்பாய்வு கூடம் 4 கோடி ரூபாய் செலவில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதார ஆய்வகத்தில் நிறுவப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இதையடுத்து, மரபணு பகுப்பாய்வு கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பணிகள் நிறைவடைந்த நிலையில் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் கொரோனா வைரஸ் மரபணு பகுப்பாய்வு கூடத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
மரபணு பகுப்பாய்வு கூடத்தில் பணிபுரிய கருணை அடிப்படையில் 91 பேருக்கு பணி நியமன ஆணையும் முதல்-அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருந்தார். 
இந்தியாவிலேயே மாநில அரசால் அமைக்கப்பட்ட முதல் மரபணு பகுப்பாய்வு மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE

Related posts

Leave a Comment