தமிழக அரசு செலவில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி-முதலமைச்சர் அறிவிப்பு

SHARE

அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்
புதுக்கோட்டையில் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்த பின் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் தமிழகத்தில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அதிக காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன என்றார்


புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐடிசி நிறுவன ஆலை தொடங்கப்பட்டு 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. முதலீட்டாளர் மாநாட்டில் எந்த தொழிலும் தமிழகத்திற்கு வரவில்லை என ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார் என அவர் குற்றம் சாட்டினார்.

272 ஏரிகள் குடிமராமத்துப் பணிகள் மூலம் தூர்வாரப்பட்டுள்ளன. ரூ. 31 கோடியில் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மத்திய அரசு கொண்டவந்துள்ள வேளாண்சட்டம் விவசாயிகளுக்கு பாதுகாப்பானது எனவும் அவர் குறிப்பிட்டார்

கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடித்தவுடன், அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் எனவும் முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்


SHARE

Related posts

Leave a Comment