இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக உள்ளார். 48 வயதான கங்குலிக்கு இன்று மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த 2-ம் தேதி சவுரவ் கங்குலிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது சவுரவ் கங்குலிற்கு ஆபத்தில்லை என்றும் சில மணி நேரங்களில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.