மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான தேதி வெளியாவதற்குள், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை, பா.ஜ.,வுக்கு இழுக்க, கட்சி மேலிடம் திட்டமிட்டிருந்தது.
கடந்த சில ஆண்டகளாகவே கங்குலிக்கு சாதகமான பல விசயங்களை பாஜக அரசு செய்துவந்தது.
இதற்கான ஏற்பாடுகளை, மேற்கு வங்க மாநில, பா.ஜ., தலைவர்கள் தீவிரமாக செய்து வந்தனர். நவம்பரில், பிரதமர் துவக்கி வைத்த நவராத்திரி நிகழ்ச்சியில், கங்குலியின் மனைவி டோனாவின் நடன நிகழ்ச்சியும் நடந்தது.இதற்கு கங்குலி வந்திருந்தார். அப்போது, அவரை பா.ஜ.,வுக்கு இழுப்பது தொடர்பாக பேசப்பட்டது. ஆனாலும், கங்குலி பிடி கொடுக்காமல் நழுவி வருகிறார்
ஆனால்,கங்குலி மம்தா மீது சற்று பாசம் உள்ளவர்.மாநிலம் சார்ந்த பற்றும் அவருக்கு அதிகம்.
இந்நிலையில் தான், நேற்று முன்தினம் நெஞ்சு வலி காரணமாக, கங்குலி, கோல்கட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ‘இதனால் கங்குலி, அரசியலுக்கு வருவது சந்தேகம்தான்’ என, அரசியல் வட்டாரங்கள் கணித்துள்ளன.
இதனால், வங்காள மக்களிடம் செல்வாக்கு படைத்த கங்குலியை தங்கள் பக்கம் இழுக்கும் பா.ஜ.முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கங்குலியை முதல் ஆளாக சென்று நலம் விசாரித்து வந்துள்ளார், வங்க மக்களின் அக்கா என அன்பாக அழைக்கப்படும், அம்மாநில முதலமைச்சர் மம்தா.