விரக்தியின் விளிம்பில் கோத்தபய- செய்வதறியாது புலம்புவதாக தகவல்

SHARE

போராட்டம் காரணமாக இலங்கையில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு மற்றும் சிங்கப்பூருக்கு தப்பி சென்றார். சிங்கப்பூரில் தங்கி இருப்பதற்காக விசா காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த 11-ந் தேதி தாய்லாந்து நாட்டுக்கு சென்றார். அங்கு 90 நாட்கள் தங்கியிருக்க தாய்லாந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது. தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு ஓட்டலில் கோத்தபய ராஜபக்சே தங்கி உள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக ஓட்டல் அறையிலேயே இருக்கும்படியும், வெளியில் வர வேண்டாம் என்றும் கோத்தபய ராஜபக்சேவிடம் தாய்லாந்து போலீசார் கேட்டு கொண்டுள்ளனர். இதனால் ஓட்டல் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்கிறார். மேலும் அரசியல் நடவடிக்கைளில் ஈடுபடக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாரமிக்க பதவியில் இருந்த கோத்தபய ராஜபக்சே ஒரு அறையில் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலையில் உள்ளார். ஓட்டல் அறைக்குள்ளேயே இருப்பது ஜெயிலில் உள்ளது போல் இருப்பதாக அவர் உணர்கிறார். அவர் நாடு திரும்ப முடியாததால் விரக்தியில் புலம்பி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தாய்லாந்தில் நவம்பர் மாதம் வரை தங்கி இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும் கோத்தபய ராஜபக்சே அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்பலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. முன்பு அவர் ஆகஸ்டு 24-ந்தேதி (நாளை) நாடு திரும்ப உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அமெரிக்காவில் குடியேற நிரந்தரமாக குடியுரிமை பெற கோத்தபய ராஜபக்சே விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


SHARE

Related posts

Leave a Comment