அவகாசம் தேவை-ஸ்டாலினுக்கு ஆளுநர் கடிதம்

SHARE

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக அனைத்து நிலைகளிலும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.  இறுதி முடிவு எடுக்க 3 முதல் 4 வாரம் அவகாசம் தேவை.  கால அவகாசம் தேவை என்பதை தன்னை சந்தித்த அமைச்சர்களிடமும் விளக்கினேன் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி ஆளுநர் மாளிகை முன் அக்டோபர் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


SHARE

Related posts

Leave a Comment