ஜி.எஸ்.டி. இழப்பீடு நிலுவைத்தொகை – 44 ஆயிரம் கோடியை மாநிலங்களுக்கு விடுவித்ததுமத்திய அரசு

SHARE

ஜி.எஸ்.டி. இழப்பீடு நிலுவைத்தொகையான 44 ஆயிரம் கோடியையும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு நேற்று விடுவித்தது.
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி. அமலில் உள்ளது. இந்த வரி விதிப்பு முறையால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இதை ஈடுகட்டுவதற்காக அவற்றுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கி வருகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு நிதியில் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
எனவே இந்த நிலுவைத்தொகையை மத்திய அரசே கடன் வாங்கி மாநிலங்களுக்கு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த நிதியாண்டில் மத்திய அரசு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி கடன் வாங்கி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியது.
இதன் தொடர்ச்சியாக இந்த நிதியாண்டிலும் மாநிலங்களுக்கான இழப்பீடு நிதியில் பற்றாக்குறை நிலவுவதால், மத்திய அரசே ரூ.1.59 லட்சம் கோடி கடன் வாங்கி வழங்குவது என கடந்த மே மாதம் நடந்த 43-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் மேற்படி நிதியை கடன் வாங்கி மத்திய அரசு அளித்து வருகிறது. இந்த தொகையில் முதல் தவணையாக ரூ.75 ஆயிரம் கோடியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடந்த ஜூலை 15-ந்தேதி விடுவித்தது. பின்னர் 2-வது தவணையாக கடந்த 7-ந்தேதி ரூ.40 ஆயிரம் கோடி விடுவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மீதமுள்ள ரூ.44 ஆயிரம் கோடியை 3-வது தவணையாக நேற்று விடுவித்து உள்ளது.இதில் தமிழகத்திற்கு ரூ.2,240.22 கோடி கிடைக்கும்.


SHARE

Related posts

Leave a Comment