ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்கள் இட ஒதுக்கீடு கோரி தொடர் போராட்டம் – பதற்றம்

SHARE

விவசாயம் மற்றும் மேய்ச்சல் தொழிலை பிரதானமாகக் கொண்டவர்கள் குஜ்ஜார் சமூக மக்கள் இந்த இனத்தை சேர்ந்த பல லட்சம் பேர் ராஜஸ்தானில் வசித்து வருகின்றனர்.

தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அங்கீகரித்து கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கேட்டு கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் போராடி வருகின்றனர். 
கடந்த ஆண்டு அவர்கள் நடத்திய போராட்டங்களால் ராஜஸ்தான் மாநிலமே ஸ்தம்பித்துப் போனது.

தற்போது  தேசிய பாதுகாப்புச் சட்டம் அமலில் உள்ள பரத்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து குஜ்ஜார் மக்கள் மீண்டும் தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. 
இன்றும் குஜ்ஜார் இன மக்களின் தொடர் போராட்டம் நீடித்து வருகிறது. தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர். 



SHARE

Related posts

Leave a Comment