சென்னையில் விடிய விடிய கன மழை நகரெங்கும் வெள்ளக்காடு

SHARE

சென்னையில் 2015ஆம் ஆண்டு பெய்த மழை மற்றும் ஊரை மூழ்கிய நிலையை நேற்று இரவு பெய்த மழை நினைவுபடுத்தியது. விடிய விடிய 2 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.

அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர்,ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது.

கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.


SHARE

Related posts

Leave a Comment