தொடர் கன மழை – தண்ணீரில் தத்தளிக்கும் கர்நாடகா.தமிழத்திற்கு பாய்ந்து வருகிறது காவிரி

SHARE

கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் முக்கிய ஆறுகளான காவேரி, ஹேமாவதி, கபிலா, ஹாரங்கியில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்கறது, அவற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 40,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வடக்கு கர்நாடகா மற்றும் மத்திய கர்நாடகாவில் உள்ள பத்ரா, துங்கபத்ரா, காடாபிரபா, மலபிரபா அல்மாட்டி அணைகளும் நிரம்பி உள்ளதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன. உடுப்பி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தேசிய பேரிடர் குழு மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தி வருகின்றனர்.

உடுப்பி நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அம்மாவட்டத்தில் ஸ்வர்ணா, சீதாநதி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 


SHARE

Related posts

Leave a Comment