நாட்டில் முதன் முறையாக வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு

SHARE

umapathykrishnan chief Editor (NAL)

இந்தியாவிலேயே முதன்முறையாக குஜராத் உயர்நீதிமன்றம், புது முயற்சியாக வழக்கு விசாரணையை யூடியூப் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. இதனையடுத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டு, வழக்கு விசாரணைகளை ஆன்லைன் மூலமே விசாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆன்லைன் வழியான வழக்கு விசாரணைகளை நீதிமன்றங்கள் தொடர்ந்து வருகின்றன.


நம்மில் பலர் நீதிமன்ற விசாரணை குறித்து திரைப்படத்தில் தான் பார்த்திருப்போம்.ஆனால் அந்த நடை முறையில் பெரும்பகுதி உண்மையில்லை என்பது நேரில் விசாரணைகளை பார்த்தவர்களுக்கு தான் தெரியும்.

அதே நேரம் உயர் நீதிமன்றம் உச்சநீதிமன்றம் போன்ற உயரிய நீதிமன்றங்களில் விசாரணை வேறு மாதிரியாக இருக்கும்.

இந்நிலையில் இந்தியாவிலேயே முதன்முறையாக குஜராத் உயர்நீதிமன்றம், புது முயற்சியாக வழக்கு விசாரணையை யூடியூப் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்துள்ளது.

வழக்கு விசாரணை எப்படி நடைபெறுகிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக சோதனை அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளபோதும் இந்த புதிய முயற்சியின் சாதக பாதகங்கள் நாட்கள் செல்ல செல்ல தான் தெரியவரும்.


SHARE

Related posts

Leave a Comment