பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பல்திஸ்தான் தேர்தல்- இம்ரான் கட்சி வெற்றி

SHARE

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியில் தேர்தல் நடத்த அந்நாடு முடிவு செய்தது.  ராணுவ ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இந்த பகுதியின் நிலைப்பாட்டை மாற்றும் எந்தவொரு நடவடிக்கையும் சட்டவிரோதம் என இந்தியா கண்டனம் தெரிவித்து வருகிறது.

எனினும், இந்த பகுதியில் கடந்த ஞாயிறன்று 24 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்தது.  இதில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக அளவாக 10 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 3 தொகுதிகளிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதுதவிர மஜ்லிஸ் வாஹ்தத்துல் முஸ்லிமீன் கட்சி ஒரு தொகுதியிலும், 7 தொகுதிகளை சுயேச்சை வேட்பாளர்களும் கைப்பற்றி உள்ளனர்.


SHARE

Related posts

Leave a Comment