இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 40 லட்சம்-பரவல் சங்கிலியை உடைக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

SHARE

உலக அளவில் அமெரிக்கா மற்றும் பிரேசிலை தொடர்ந்து, தொற்று மற்றும் பலி எண்ணிக்கையில் இந்தியா 3-வது இடம் என்ற மோசமான சாதனையை தொடர்கிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,432-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 40,23,179-ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன்   8,46,395 -பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் 69,561-பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஆந்திரா, பஞ்சாப், கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய 4 மாநிலங்களில் அதிக தொற்று ஏற்பட்டு வரும் 15 மாவட்டங்களின் சுகாதார செயலாளர்களுடன் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கடுமையான கட்டுப்பாடுகள், சமூக விலகல் நடவடிக்கைகள், வீடு, வீடாக சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்குமாறு பூஷண் கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சென்னை, கோவை, சேலம் மற்றும் லக்னோ, கான்பூர் நகர், பல்லாரி, கொப்பல், பெங்களூரு நகர்ப்புறம் உள்ளிட்ட மாவட்ட சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


SHARE

Related posts

Leave a Comment