இந்தியாவில் மேலும் 3.89 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலமடைந்தனர்.

SHARE

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,89,851 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 19 லட்சத்து 86 ஆயிரத்தை தாண்டியது.

ஒரேநாளில் 2,67,334 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 கோடியே 54 லட்சத்து 96 ஆயிரத்தை கடந்தது. 32.26 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் 4,529 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்தம் 2,83,248 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 86.23 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.11 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 12.66 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


SHARE

Related posts

Leave a Comment