இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் புது உச்சமாக 83,883 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
68,585 பேர் கொரோனாவில் இருந்துகுணமடைந்தனர்.ஆந்திரா மற்றும கர்நாடக மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று பரவி வருகிறது.
தமிழகத்தை பின்னுக்கு தள்ளி ஆந்திரா நாட்டின் இரண்டாவது மாநிலமாக உருவெடுத்துள்ளது.
கர்நாடகா மாநிலம் விரைவில் தமிழகத்தை முந்திவிடும் என கணிக்கப்பட்டுள்ளது. சரியான திட்டமிடல் இல்லாததால் ஆந்திராவிலும், பொதுமுடக்கத்தை முற்றிலும் விலக்கிக்கொண்டதால் கர்நாடகத்திலும் நோய் பரவல் அதிகரித்து வருகிறது.
இப்படியே சென்றால் இன்னும் ஒரு மாதத்தில் இந்தியா உலகின் முதலிடத்திற்கு சென்று விடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.