இந்தியாவில், கோவிட் பாதிப்பு குறைந்து வரும் சூழ்நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவிட் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மிகவும் பாதிக்கப்பட்ட சுற்றுலா, சேவை மற்றும் விமானத்துறைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், முதல் 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு, விசாவை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாகவும், இந்தியா வரும் பயணிகளுக்கான விதிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சக அதிகாரிகள் விரிவாக ஆலோசனை நடத்தி வருவதாகவும், அடுத்த 10 நாட்களுக்குள் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக்கூறப்படுகிறது.
