umapathy Krishnan
சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த பெரிய தொழிலதிபரின் மகள், உயர்படிப்பிற்காக லண்டனிற்கு சென்றுள்ளார். அந்த பெண் கடந்த மே மாதம் 28-ஆம் தேதி முதல் திடீரென்று காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, இது குறித்து சென்னை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பிக்க, கடந்த 16-ஆம் தேதி முதல் இது தொடர்பான விசாரணை தொடங்கியது என்ஐஏ. அப்போது அந்த பெண்ணை கடத்தியது வங்கதேசத்தை சேர்ந்த நபீஸ் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
இவர், ஜாகிர் நாயக் நாயக்கின் உதவியுடன், ராயபுரம் பெண்ணை லண்டனுக்கு கடத்தி சென்றுள்ளார். கடத்தியது மட்டுமின்றி, அந்த பெண்ணை மதமாற்றம் செய்துள்ளார்.
இந்த கடத்தல் செயலில் ஈடுபட்ட நபீஸ் வங்கதேசத்தில் ஒரு அரசியல்வாதியின் மகன். ஆனால் அவர் ஏன் அந்த பெண்ணைக் கடத்தினார் என்பது தெரியவில்லை. ஏற்கனவே அந்த பெண் அவரின் காதல் வலையில் விழுந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கபடுகிறது.
இதனால் அவர் பணம் கேட்டு மிரட்டுவதற்காக இப்படி செய்தாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறது என்ஐஏ., மிரட்டி பணம் பறிப்பது என்றால், எதற்காக மதமாற்றம் செய்ய வேண்டும்? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஒரு வேளை அந்த பெண்ணை காதலிப்பது போல் ஏமாற்றி சொத்துக்களை அபகரிக்க முடிவு செய்துள்ளனரா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே நாட்டை விட்டு தப்பி மலேசியாவில் தஞ்சம் புகுந்துள்ள மத போதகர் ஜாகிர் நாயக் இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்தததாக தகவல்களை கசிய விட்டிருக்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.
இது புதிய வலை
நாட்டை விட்டு தப்பி சென்று மலேசியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஜாகிர் நாயக்கை படிக்க ஏற்கனவே என்ஐஏ வலை விரித்திருந்த நிலையில் அந்நாட்டின் முன்னாள் அதிபரும், செல்வாக்கு மிக்க தலைவருமான மகாதிர் முகமதுவின் முழு ஆதரவு ஜாகிருக்கு இருந்ததால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஜாகிர் எங்கள் நாட்டு விருந்தாளி அவர் எவ்வளவு நாட்கள் வேண்டுமானலும் இங்கு இருக்கலாம் என மகாதிர் தெரிவித்திருந்தார்.

மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஜாகிர்நாயக்
ஜாகிர் நாயக்கை பொறுத்தவரை மேற்கத்திய உடையணிந்த முதல் இஸ்லாமிய மத போதகர் என்று சொன்னால் அதில் தவறு இருக்காது.
ஆயிரக்கணக்கானவர்களை பல மணி நேரம் அசையாமல் அமரவைக்கும் திறம் படைத்தவர் ஜாகிர் நாயக்.
மிக எளிமையாக உதாரணங்களுடன் மத பிரச்சாரம் செய்வதில் வல்லலவர் . உலகத்திலேயே தான் தான் தலை சிறந்த மத போதகர் என்ற கர்வம் அவரின் பேச்சுக்களில் இருந்து நாம் எளிதாக அறிய முடியும்.
அதே போல ஆசியாவில் இஸ்லாமிய அரசியல், தன்னை சுற்றி தான் இருக்கிறது என்பது போன்ற மாயதோற்றத்தை உருவாக்கவும் அவர் தவறவில்லை
சீனர்கள் தமிழர்களை வம்புக்கு இழுத்து சிக்கி முடங்கினார் ஜாகிர்
மிகவும் செல்வாக்கு பெற்ற மூத்த அரசியல் தலைவர் மகாதிர் முகமது இவரது தீவிர ரசிகர்.இதனை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு பிற மத கடவுள்களையும் பிற இணத்தவர்களையும் சீண்ட துவங்கினார் ஜாகிர் நாயக்
முதன் முதலாக இந்து கடவுளை விமர்சிக்க துவங்கினார் ஜாகிர். இந்த விமர்சனத்திற்கு முதல் எதிர் குரல் கொடுத்தவர் பினாங்கு மாகாண துணை முதலமைச்சர் ராமசாமி.
இதனை தொடர்ந்து ஒரு மோசமான வார்த்தையை உதிர்த்தார் ஜாகிர். “மலேசியாவில் பிறந்து வளர்ந்த இந்துக்கள் மலேசிய மண்ணிற்கு விசுவாசம் காட்டாமல் இந்திய அரசுக்கு தான் விசுவாசமாக இருக்கிறார்கள்” என்ற அவரின் பேச்சு அங்குள்ள இந்தியர்களை மேலும் கொதிப்படைய செய்தது.
இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் செல்வாக்கு உள்ள பினாங்கு மாகாணத்தில் ஜாகிர் நுழைய கட்டுப்பாடுகளுடன் தடை விதிக்கப்பட்டது.
பினாங்கு மாகாண துணை முதலமைச்சர் தொடர்ந்து ஜாகிரை விமர்சிக்க துவங்கினார்.அவரது பல பேச்சுக்களை ஆதாரத்துடன் விமர்சித்தார் .

இதற்கு சீனர்கள் ஆதரவு தெரிவிக்கவே சீனர்கள் மீது பாய்ந்தார் ஜாகிர். வந்தேரியே வெளியே போ என சீனர்களும் தமிழர்களும் குரல் எழுப்ப ,மலேசியாவை பொறுத்த வரை சீனர்களும் வந்தேறிகள் தான் என்ற ஜாகிர் நீங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் வந்தாலும் வந்தேறிகள் தான் என்றார். முதலில் நீங்கள் வெளியேறுங்கள்.அடுத்து நான் வெளியேறுகிறேன் என அவர் முத்துதிர்த்க, ஜாகிரை ஆளாளுக்கு அடிக்க துவங்கினர். பல மாகாணங்களுக்கு அவர் வர தடை விதிக்கப்பட்டது.
ஆத்திரம் கொண்ட மகாதிர்
தனது பிரியத்திற்குறிய ஜாகிர் நாயக்கை ஆளாளுக்கு வெளுத்து வாங்க கொதித்தெழுந்தார் மகாதிர்.
தமிழ் தலைவர்கள் சிலர் விடுதலை புலிகள் ஆதரவாளர் என முத்திரை குத்தப்பட்டனர். முன்னதாக மலேசியா சென்ற சீமானுக்கு வரவேற்பு கொடுத்தவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் எல்லாம் புலி ஆதரவாளர்கள் என தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர்.காரணம் சீமான் கட்சி கொடி விடுதலை புலிகள் அமைப்பின் கொடி போன்று இருந்ததால் இப்படி ஒரு முடிவை எடுத்து கள இறங்கினார் மகாதிர்.
ஜாகிரை தீவிரமாக எதிர்த்த பினாங்கு மாகாண துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமியை கைது செய்யவும் பல முயற்சிகள் நடந்தது.
ஆனால், அது கைகூடவில்லை, இதற்கிடையே ஒரு அரசியல் ஆட்டத்தை துவங்கினார் மகாதிர்.எதிர்கட்சிகளை உடைத்து நீண்ட கால பிரதமராக தொடர ஆசைப்பட்டு ஒரு ஆட்டத்தை துவங்கினார்.
ஆனால் அந்நாட்டு மன்னர் தனது ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவார் என மகாதிர் நினைத்துக்கூட பார்க்க வில்லை.
ஆட்டத்தில் தோற்று மகாதிர் பதவியிழந்தார்.அடுத்து கொரோனா வந்தது.ஜாகிர் பற்றிய பேச்சுக்கள் அமுங்கி போனது.
ஜாகிரின் காலம் முடிகிறது
அவரும் சற்று அமைதியானார்.இந்த நிலையில் தான் ஜாகிர் நாயக்கை பிடித்துவர களத்தில் இறங்கியுள்ளது என்ஐஏ. ஏதாவது ஒரு வழக்கை காட்டி விரைவில் ஜாகிரை தூக்கி விடுவார்கள் என்றே தோன்றுகிறது. அதற்கு இந்த சென்னை பெண் கடத்தல் கை கொடுக்கும் என என்ஐஏ நம்புவதாக தெரிகிறது.