உலகின் பெரிய தடுப்பூசி திட்டம் : டுவிட்டரில் டிரெண்டிங்

SHARE

இந்தியாவில் உலகின் மிக மிகப் பிரமாண்டமான தடுப்பூசி போடும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்சிங்’ வழியாக துவக்கி வைத்தார். இதில் பேசிய மோடி, ”சரியான நேரத்தில் நமக்கு தடுப்பூசி கிடைத்துள்ளது. குறைந்த காலத்தில் இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள், டாக்டர்களுக்கு பாராட்டு. கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை மக்கள் நம்பக்கூடாது” என்றார்.

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் முதலாவதாக, தூய்மை பணியாளருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த டாக்டர் உள்ளிட்ட பிறர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதேப்போன்று நாடு முழுக்க ஒவ்வொரு மாநிலத்திலும் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது. . முன்னதாக பல ஊர்களில் கொரோனா தடுப்பூசி மருந்து உள்ள பெட்டகத்திற்கு பூஜை செய்த நிகழ்வுகள், தடுப்பூசி வருகையை பட்டாசு வெடித்து கொண்டாடிய நிகழ்வுகளும் நடந்தன.

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவில் உலகின் பெரிய தடுப்பூசி திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளதால் இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. பலரும் இதை வரவேற்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


SHARE

Related posts

Leave a Comment