ஆகாஷ் ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றி

SHARE

ஆகாஷ் ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது.
டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ஆகாஷ் ப்ரைம் என்ற ஏவுகணையை வடிவமைத்துள்ளது. தரையிலிருந்து ஆளில்லா விமானங்கள் மீது ஏவி , ஒடிசாவில் சந்திப்பூர் வான் பகுதியில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

அப்போது இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது.

டி.ஆர்.டி.ஓ., அமைப்பிற்கு மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த ஏவுகனை எவ்வளவு தூரம் பறந்து சென்று தாக்கும் என்பது குறித்தோ இதன் பிற சக்திகள் குறித்தோ எந்த தகவலையும் டி.ஆர்.டி.ஓ. பதிவு செய்யவில்லை.


SHARE

Related posts

Leave a Comment