இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உடல் நல குறைவால் காலமானார்

SHARE

இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன்.

கடந்த நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள் இவர் இல்லாமல் நடைபெறாது .

தமிழகத்தில் ஒரு வங்கி தலைவர் இவ்வளவு செல்வாக்குடன் இருந்ததாக வரலாறு இல்லை.

காரணம் இவர் பொதுமக்களுடனும் பெரிய மனிதர்களுடனும் பழகும் விதம் அப்படி.

80களில் தமிழகத்தில் பொறியில் கல்லூரிகள் அதிகரிக்க துவங்கிய சமயம், அவைகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாக திகழ்ந்தவர் கோபாலகிருஷ்ணன்.

அன்று வங்கி கடன் வழங்கியிருக்காவிட்டால் இன்று பல முன்னனி கல்லூரிகள் இருந்திருக்காது.

,இன்று லட்சக்கணக்கான பொறியில் மாணவர்கள் தமிழகத்தில் உருவாக இவரும் ஒரு காரணம்..

1000கணக்கான கோடிகள் சொத்துக்களுடன்  அந்த கல்லூரிகளும்ம வளர்ந்து நிற்கின்றன.

இதே போல பல வளர்ந்த தொழிற் நிறுவனங்களை வளர்த்து விட்டவர்கோபால கிருஷ்ணன்.

ஜி.கே.மூப்பனார்,கலைஞர் கருணாநிதி,அம்மையார் ஜெயலலிதா ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர்.

இந்திய அளவில் அவருக்கு தெரியாத விஐபிகளே இல்லை என்ற அளவிற்கு பிரபலமாக வாழ்ந்தவர் கோபால கிருஷ்ணன்.

சென்னையில் முதன் முறையாக பத்திரிக்கையாளர் குடியிருப்பு கட்வதற்கு அடித்தளம் இட்டவர் அவர்.

80களில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பொருளாதார போதாத நிலையில் இருந்த நம்பர் ஒன் பத்திரிக்கைக்கு பெரும் அளவில் கடன் வழங்கியவர்.

பின்னர் அந்த பத்திரிக்கையின் 50ம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றதுடன் பெரிய அளவில் கெவுரவிக்கப்பட்டார் கோபால கிருஷ்ணன்.

இப்படி ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய மாமனிதன் நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 86

அவரது தந்தை திரு ராதாகிருஷ்ணன் தான் சென்னையின் முதல் மேயர்,மிகுந் செல்வாக்கு படைத்த குடும்பத்தில் பிறந்தவர் கோபால கிருஷ்ணன்

தற்போது அகில இந்திய யாதவ மகாசபை தலைவராக இருந்து வந்தார் கோபாலகிருஷ்ணன்.

அகில இந்திய அளவில் அதிகாரத்தில் உள்ள ஒரு தனி மனிதனால் நம் மாநிலத்தில் இத்தனை நிறுவனங்களை வளர்த்துவிட முடியும் என நிரூபித்த கோபாலகிருஷ்ணன் தமிழக வரலாற்றில் நீண்ட காலம் நினைவில் நிற்பார்,


SHARE

Related posts

Leave a Comment