இந்திய தடுப்பூசி சான்றிதழை ஏற்க 96 நாடுகள் ஒப்புதல்

SHARE

கொரோனா தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக்கொள்ள, 96 நாடுகள் ஒப்புதல் தெரிவித்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறி உள்ளார்.

நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடக்கிறது. இன்று (நவ.09) வரை செலுத்திய ‘டோஸ்’களின் எண்ணிக்கை 110 கோடியை நெருங்கி உள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று (நவ.09) கூறியதாவது:கல்வி, வணிகம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, நம் மக்கள் பிற நாடுகளுக்கு செல்லும் நிலை உள்ளது.அவர்கள் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திய பின் வழங்கப்படும் சான்றிதழை ஏற்பது தொடர்பாக, பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து, நாம் வழங்கும் தேசிய அளவிலான தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக்கொள்ள, 96 நாடுகள் ஒப்புதல் தெரிவித்து உள்ளன.அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின், கஜகஸ்தான், ரஷ்யா, இலங்கை, மாலத்தீவுகள், மொரிஷியஸ், பிரேசில், அர்ஜென்டினா, நேபாளம், குவைத், கொலம்பியா, ஈரான், கத்தார், பாலஸ்தீனம் உள்ளிட்ட 96 நாடுகள் இப்பட்டியலில் அடங்கும்.பிற நாடுகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வெளிநாடு செல்ல விரும்புவோர், சர்வதேச பயணத்திற்கான தடுப்பூசி சான்றிதழை ‘கோவின்’ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அவர் கூறினார்.


SHARE

Related posts

Leave a Comment