இந்திய-அமெரிக்க உறவு வலிமையாக இருக்கும்: வெளியுறவு துறை

SHARE

இந்திய – அமெரிக்க உறவு தொடர்ந்து வலிமையாக இருக்கும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளதுஅமெரிக்க அதிபராக தேர்வு பெற்றுள்ள ஜோ பைடனும் பிரதமர் மோடியும் தகுந்த நேரத்தில் சந்தித்து பேசுவர்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர்களாக இருந்த அனைவரும் இந்தியாவுடனான நட்புறவுக்கு எப்போதும் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.


அதனால் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடனும் இந்திய உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. அதனால் இந்திய – அமெரிக்க உறவு தொடர்நது வலிமையாக இருக்கும். ஜோ பைடனும் பிரதமர் மோடியும் தகுந்த நேரத்தில் சந்தித்து பேசுவர். இவ்வாறு அவர் கூறினார்.


SHARE

Related posts

Leave a Comment