மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி ‘ரெய்டு’

SHARE

இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில் கிறிஸ்துவ மத பிரசாரக் கூட்டங்களை நடத்தி வருபவர் பால் தினகரன்.

இவரது ஜபகூடங்களுக்கு வருபவர்களிடம் ஜபம் செய்வதற்கு பணம் பெறுவது மற்றும் டெலி காலர்கள் மூலம் ஜபம் செய்வது இவரது விஷேச அம்சம்.

கிறிஸ்துவ மதபோதகரான இவர் கோவையில் காருண்யா பல்கலை.,யும் நடத்தி வருகிறார். இயேசு அழைக்கிறார் குழுமத்துக்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை என பால் தினகரன் மீது புகார் எழுந்தது.


இதனையடுத்து, தமிழகம் முழுவதும் சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலை உள்ளிட்ட 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.


SHARE

Related posts

Leave a Comment