அகில உலக நிஜ சூப்பர் ஸ்டார், ஜாக்கி சானுக்கு தற்போது வயது 66 . இந்த வயதிலும் இவர் ஆக்சனில் கலக்கிய , ‘வான்கார்டு’ என்ற திரைப்படம், வரும், 30ம் தேதி, வெளியாகிறது. இதையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், படப்பிடிப்பு அனுபவங்களை, ஜாக்கி சான் பகிர்ந்து கொண்டார்.
வான்கார்டு படம், துபாய், தைவான் உள்ளிட்ட நாடுகளில் எடுக்கப்பட்டது. இந்த படத்திலும், வழக்கம் போல சண்டை காட்சிகளில் பல விபத்துக்களை சந்தித்தேன். அவற்றில் நீரில் மூழ்கிய விபத்து மறக்க முடியாதது. ‘ஜெட்ஸ்கை’ எனப்படும், ஒருவகை படகில் நடிகை, மியா முகியுடன் வேகமாக செல்லும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது, ஒரு சிறிய பாறையில் இடித்து படகு கவிழ்ந்தது. நான் நீரில் மூழ்கினேன்.
அதன் பின் நடந்ததை படக் குழுவினர் தான் தெரிவித்தனர். நீரில் மூழ்கியதும், மியா முகி உடனே, மேலே வந்து விட்டார். நான், படகுடன் இணைக்கப்பட்டிருந்ததால், வெளிவர முடியமல், 47 வினாடிகள் வரை நீரில் மூழ்கியிருந்திருக்கிறேன். ஏதே ஒரு தெய்வீக சக்தி என்னை காப்பாற்றியுள்ளது. என்னையும் அறியாமல், படகுடன் இருந்த தொடர்பை விடுவித்துக் கொண்ட உடன், தன்னிச்சையாக கடல் மட்டத்திற்கு மேலே வந்துள்ளேன்.
அதுவரை என்னை காணாததால், படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலே வந்தபின், இயக்குனர், ஸ்டான்லி டாங் கண்ணிர் நீர் கசிய என்னை கட்டித் தழுவி கொண்டார்.
இவ்வாறு ஜாக்கி சான் தெரிவித்தார்.