ஜல்லிக்கட்டு போட்டிகளை காண ராகுல் தமிழகம் வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பொங்கல் பண்டிகையை ஒட்டி உலக புகழ்பெற்ற தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிகட்டு மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுவது வழக்கம்
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஜல்லிகட்டு போட்டிகள் நடத்துவதற்கு ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அலங்காநல்லூர்,பாலமேடு,அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு அனுமதி சீட்டுகளை பெற அதன் உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி இந்த போட்டிகளில் ஒன்றை காண வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனேகமாக அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டிகளை காண அவர் வரக்கூடும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.