சீனா உடனான பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை: ஐநா சபையில் பைடன் உறுதி

SHARE

. ஐநா பொதுச் சபையின் 76வது கூட்டத்தில் உலகளாவிய பொது விவாதம் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் முதல் முறையாக உரையாற்றினார். அமெரிக்கா-சீனா இடையே சமீபகாலமாக  நிலவும் மோதல் போக்கால் உலக பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுகிறது. இதுதொடர்பாக ஐநா பொதுக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அதிபர் பைடன் தனது பேச்சில், ‘‘அமெரிக்கா யாருடனும் புதிய பனிப்போரை விரும்பவில்லை. நாங்கள் புதிய யுகத்தை தொடங்கப் போகிறோம். எங்கள் மீது சந்தேகம் கொண்ட நாடுகளுடனும் தணியாத உறவை வளர்க்கப் போகிறோம். எங்களின் மேம்பாட்டு உதவிகளை புதிய வழிகளில் முதலீடு செய்து, உலகம் முழுவதும் உள்ள மக்களின் வளர்ச்சிக்கு துணை நிற்போம். கொரோனா மற்றும் அதன் எதிர்கால பிறழ்வுகளில் இருந்து வெடிகுண்டுகளோ, தோட்டாக்களோ காக்கப் போவதில்லை. ஆப்கானிஸ்தானில் நீண்ட கால போரை முடித்துக் கொண்டுள்ளோம். இனி எங்களின் கவனம், சுமூக உறவுகளை நோக்கி திசை திரும்பி உள்ளது,’’ என்றார்.
ஐநா பொதுச் சபை கூட்டத்தில், ஆப்கானிஸ்தான் தலிபான் ஆட்சி குறித்து முக்கிய பிரச்னையாக பேசப்பட உள்ளது. இந்நிலையில், முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி நியமித்த ஐநா.வுக்கான ஆப்கானின் நிரந்தர தூதர் ஐசாக்சாயை மாற்றிய தலிபான்கள், தங்களின் புதிய பிரதிநிதியாக முகமது சுஹைல் ஷாகீனை பரிந்துரை செய்துள்ளனர். மேலும், ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பேச அனுமதிக்குமாறும் ஐநா பொதுச் செயலாளர் கட்டரசுக்கு தலிபான் அரசு கடிதம் அனுப்பி உள்ளது.


SHARE

Related posts

Leave a Comment