வெற்றி கோட்டின் அருகே ஜோபிடன்-நூலிலையில் தொடரும் ட்ரம்ப்

SHARE

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு தற்போது 264 பேரின் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், இன்னும் 6 ‘எலக்ட்டோரல் காலேஜ்’ உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது. டிரம்புக்கு 214 பேரின் ஆதரவு உள்ளது. இந்த நிலையில், பென்சில்வேனியா உள்ளிட்ட முக்கிய மாகாணங்களின் முடிவே, யார் அதிபர் என்பதை தீர்மானிக்க உள்ளது.

அமெரிக்க தேர்தல் வரலாற்றில், மிகவும் கடுமையான போட்டியை சந்தித்துள்ள தேர்தலாக, 2020 அதிபர் தேர்தல் அமைந்துள்ளது. குடியரசு கட்சியின், அதிபர், டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன், இடையே துவக்கத்தில் இருந்தே கடும் போட்டி நிலவியது. ஆனால், பின்னர் வந்த கருத்துக் கணிப்புகள், ஜோ பிடனுக்கு ஆதரவாக இருந்தன.

தேர்தலில் மக்கள் அளிக்கும் ஓட்டுகள், ‘பாப்புலர்’ ஓட்டுகள் எனப்படும். அதாவது, அவை அதிபர் வேட்பாளருக்கு கிடைத்தாலும், அதிக ஓட்டுகளை பெறுபவர் அதிபராக அறிவிக்கப்பட மாட்டார். ஒவ்வொரு மாகாணத்திலும், மக்கள் எந்தக் கட்சிக்கு அதிக ஓட்டளிக்கின்றனர் என்பதன் அடிப்படையிலேயே, அதிபர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். மாகாணங்களின் அளவுக்கு ஏற்ப, மொத்தம், 538 ‘எலக்டோரல் காலேஜ்’ எனப்படும் வாக்காளர் குழுவுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.அவ்வாறு தேர்வு செய்யப்படும், எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் தான், அதிபரை தேர்வு செய்வர். அதன்படி, 270 ஓட்டுகளை பெறுபவர், அதிபராக தேர்வு செய்யப்படுவார்.

இந்த நிலையில், ஓட்டுப் பதிவு முடிந்து, ஓட்டு எண்ணிக்கை நேற்று துவங்கியது. துவக்கத்தில் இருந்தே, இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர். தற்போதைய நிலவரப்படி, ஜோ பிடனுக்கு, 264, ‘எலக்டோரல் காலேஜ்’ உறுப்பினர்கள் ஆதரவும், டிரம்புக்கு, 214 பேரின் ஆதரவும் உள்ளது.

கிட்டத்தட்ட பெரும்பாலான மாகாணங்களில் முடிவுகள் தெரிந்துள்ள நிலையில், பென்சில்வேனியா, விஸ்கான்சின், வடக்கு கரோலினா, ஜார்ஜியா, நவேடா மாகாணங்களில் முடிவுகள் தெரியவில்லை. இந்த மாகாணங்கள் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லாமல், இழுபறி மாகாணங்கள் என்பதால், இவற்றின் முடிவுகள் தெரிந்தால் தான், யார் அடுத்த அதிபர் என்பது தெரியவரும்.அதனால், அமெரிக்க மக்கள் மட்டுமல்லாமல், உலகமே, இந்த மாகாணங்களின் முடிவுக்காக காத்திருக்கின்றது. பென்சில்வேனியாவில் மட்டும், 20 எலக்டோரல் காலேஜ் ஓட்டுகள் உள்ளன.

இதனிடையே மிச்சிகன் மாகாணத்தில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். நவேடா, விஸ்கான்சின் மாகாணங்களில் முன்னிலையில் உள்ளார்.
வடக்கு கரோலினா, ஜார்ஜியா, பென்சில்வானியா மாகாணங்களில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment