அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின் சார்பி போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோ பைடன், இன்று பதவியேற்க உள்ளார்.
தலைநகர் வாஷிங்டனில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அமெரிக்காவின் புதிய அதிபராக அதிபராக ஜோ பைடன் இன்றுபதவியேற்க உள்ளார். இதையடுத்து தலைநகர் வாஷிங்டன் விழாக்கோலம் பூண்டுள்ளது.

முன்னதாக தலைநகர் வாஷிங்டனில், பதவியேற்பு விழா நடக்கவுள்ள, ‘கேப்பிடோல்’ எனப்படும், அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் முகப்பில், ‘டைல்ஸ்’களை பயன்படுத்தி, அமெரிக்கவாழ் இந்தியர்கள், பிரமாண்ட கோலங்களை உருவாக்கி உள்ளனர்.
பதவியேற்பு விழாவின் போது டிரம்ப் ஆதரவாளர்களால் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க பாதுகாப்புப் பணிககாக, 25 ஆயிரம், ‘நேஷனல் கார்ட்’ எனப்படும் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.