ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு குடியுரிமை-ஜோ பிடன் பிரசார குழு பதில்

SHARE

இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்த அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் ,,’தெற்காசியாவில் பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள மாட்டோம்; – என, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பிரசாரத்தில் உறுதியளிக்கப்பட்டது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல், நவ., 3ல் நடக்கிறது. இதில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், ஹிந்து அமெரிக்கர் அரசியல் நடவடிக்கை குழு சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ஜோ பிடனின் பிரசார குழு அளித்த பதில்களில் , இந்தியா – அமெரிக்கா இடையேயான நட்பு, இயற்கையாகவே அமைந்துள்ளது. இரு நாடுகளும், பல விஷயங்களில், ஒருமித்த கருத்துக்களை கொண்டுள்ளன. ஜோ பிடன் தலைமையில் ஆட்சி அமைந்தால், இந்தியா – அமெரிக்கா இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்த, அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் பயங்கரவாதத்தை சிறிதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். பயங்கரவாதத்தை ஒழிப்பதில், இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என ஜோ பிடன் பிரசார குழு பதில் அளித்தது பல்வேறு நாடுகளிலிருந்து குடியேறுபவர்களின் நாடாக அமெரிக்கா உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒரு கோடிக்கும் அதிகமான அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவோம். இதில், இந்தியர்கள், 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர்.

இந்து பண்டிகைகள், அரசு விழாக்களாக கொண்டாடப்படும். ஒபாமா அதிபராக இருந்த போது, வெள்ளை மாளிகையில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டது. ஜோ பிடன் அதிபரானால், வெள்ளை மாளிகையில், தீபாவளி, ஹோலி, விநாயகர் சதுர்த்தி உட்பட, பல இந்து பண்டிகைகள் கொண்டாடப்படும். என, ஜோ பிடன் பிரசார குழு பதில் அளித்தது


SHARE

Related posts

Leave a Comment