காபூல் மருத்துவமனை தாக்குதல் – 25 பேரை கொன்று குவித்த ஐ.எஸ்.

SHARE

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ராணுவ மருத்துவமனை உள்ளது. காபூலில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை இது. இந்த மருத்துவமனையில் நேற்று அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. 
இதனை தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சூடு தாக்குதலும் நடத்தப்பட்டது. உடலில் வெடிகுண்டை மறைத்து கொண்டுவந்த நபர் மருத்துவமனை வளாகத்தில் மக்கள் அதிகமாக கூடியிருந்த பகுதியில் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்தார்.
இந்த தாக்குதலில் மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால், காபூல் ராணுவ மருத்துவமனை போர்களம் போல காட்சியளித்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனை பகுதியில் தலீபான் அமைப்பின் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை யார் நடத்தியது என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.
இந்நிலையில், காபூல் ராணுவ மருத்துவமனை மீது நாங்கள் தான் தாக்குதல் நடத்தினோம் என்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 
எங்கள் அமைப்பின் 5 பேர் இந்த தற்கொலைப்படை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஹரொசன் பிரிவு தெரிவித்துள்ளது. 


SHARE

Related posts

Leave a Comment