கமல் கட்சியில் இருந்து சோதனை எலிகள் தொடர்ந்து விலகல் .

SHARE

உமாபதி கிருஷ்ணன்

திரை துறையில்தன்னுடைய அயராத முயற்சி மற்றும் பல நாடுகளில் தேடி சென்று எடுத்துக்கொண்ட பயிற்சி காரணமாக அதி புத்திசாலி என பெயர் பெற்றவர் கமல்.

ஆனால் அடிப்படை கூட தெரியாமல் அரசியலில் அகலகால் வைத்த கமலஹசான் தேர்தலில் படு தோல்வியை சந்தித்தார்.

தேர்தலுக்கு முன்னதாக பல துறை வல்லுனர்கள் கமலை ஒரு பெரிய மாற்று சக்தியாக நினைத்து அவர் பின் அணிவகுத்தனர்.

இவர்களில் பெரும்பாலானோர் தத்தமது துறைகளில் வல்லுனர்கள். ஆனால் இவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதால் தங்களுக்கு என ஒரு தலைவனை ஏற்று ,பின்னர் அதன் மூலம் செல்வாக்கை பெறலாம் என கமல் பின் அணிவகுத்தனர்.

ஆனால் கமலோ இவர்களை சோதனை எலிகளாக பயண்படுத்த எண்ணினார் போலும். இவர்களின் நற்பெயர்களையும் கடந்த காலத்தில் இவர்கள் வகித்த கவுர பதவிகளையும் தன் கட்சி வளர்ச்சிக்கு பயண்படுத்தினார்.

இரு தரப்பினரும் ஹிடன் அஜென்டாவுடன் தேர்தலுக்கு முன்பு வரை தீவிரமாக நடித்தனர்.பலர் நடிப்பில் கமலையும் விஞ்ஜினர்.

கமல் மையம் என கட்சியின் பெயரை அறிவித்ததே தற்போதைய ப்ரென்ச் அதிபர் இமானுவேல் மேக்ரோன் மாடல் அரசியலை பின்பற்றி தான். La République En Marche என்ற இடதுசாரி மற்றும் வலதுசாரி கொள்கைகளை கலந்து மையமாக ஒரு கொள்கையை உருவாக்கி ,அதன் அடிப்படையில் ஆட்சி என பிரகடனப்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்றவர் இமானுவேல் மேக்ரோன்.அவருக்கு வயதும் மிக குறைவு.43 வயதல் பல சீனியர் தலைகளை காலி செய்து அதிரடியாக ஆட்சியை பிடித்தவர் அவர்.

இதனால் தான் இமானுவேல் மேக்ரோன் மாடல் அரசியலை கமல் கையில் எடுத்திருக்கலாம்.ஆனால் அது ஒரு காய்ந்த பீட்சா .நம்ம ஊரு பிச்சைகாரன் கூட அதை சாப்பிட மாட்டான் என கமல் உணரவில்லை.

மற்றொரு விசயம் இந்த சென்ட்ரிக் என செல்லப்படும் மையம் என்ற அரசியல் தத்துவம் ஒன்றும் புதிய விசயம் இல்லை .

நாம் சுதந்திரம் பெற்ற பின்னர் நேரு அவர்கள் 70 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அடிபடையில் தான் இந்திய அரசியல் அமைப்பை கட்டமைத்தார் .

இது,கமலுக்கு தெரியாமல் இருந்தததா ! அல்லது அவர் தெரிந்திருக்காத விசயத்தில் இதுவும் ஒன்றா ? என தெரியவில்லை.

மற்றொரு விசயம், நம் ஊரை பொருத்த வரை காசை கொடுத்தால் காலை நக்கி பிழைப்பவனுக்கு கூட வாக்களிக்க ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது என்பதையும் கமல் இந்த தேர்தல் படுதோல்விக்கு பின்னர் தெரிந்து கொண்டிருப்பார்.

தோல்விக்கு பின் பெருத்த அவமானம். தான் தான் ஹீரோ என களம் கண்ட கமல் தோல்விக்கு பின் அவரால் சோதனை எலிகளாக களம் இறக்கப்பட்டவர்களை கைக்காட்டினார்.

துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச்செயலர் குமாரவேல், தலைமை அலுவலக பொது செயலரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சந்தோஷ்பாபு, மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட சமூக ஆர்வலர் பத்மபிரியா உள்ளிட்டோர் கட்சியில் இருந்து விலகினர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலராக இருந்த முருகானந்தம் திருச்சியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கட்சியில் இணைந்த போது எனக்கான சுதந்திரம் கொடுக்கப்பட்டது. இதனால், கட்சியில் என்னால் முழுமையாக உழைக்க முடிந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக கட்சியில் சர்வாதிகாரம் தலைதூக்கி ஜனநாயகம் அற்றுபோய் விட்டது. கட்சியின் தலைவர் மக்கள் நீதி மய்யத்தை நமது கட்சி என்பதை மறந்து அது என்னுடைய கட்சி என கூற ஆரம்பித்து விட்டார்.

சட்டசபை தேர்தலில் கட்சியில் எந்த நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்தாமல் , பலவீனமான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 100க்கும் அதிகமான இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதுதான் தோல்விக்கு காரணம். எதற்காக நூறு இடங்களை கூட்டணிக்கு ஒதுக்கினார் என்பது இதுவரை தெரியவில்லை. கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் பல்வேறு கேள்விகளை நான் கமலிடம் எழுப்பினேன். ஆனால், அவர் எதற்கும் பதில் கூறவில்லை.

மக்கள் நீதி மய்யத்தின் தலைமை சரியான தலைமை அல்ல. சரியான பாதையில் அந்த கட்சி வழி நடத்தப்படவில்லை. தோல்வியை அவர் ஏற்காமல், எங்கள் மீது திருப்பி விட்டார். ஆனால், மநீம தோல்விக்கு கமல் தான் காரணம். மநீம கட்சியில் வகித்த பொதுச்செயலர் பொறுப்பில் இருந்தும், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன். என்னுடன் சேர்ந்து கட்சியில் 15 நிர்வாகிகள் கட்சியில் இருந்துவிலகி விட்டனர். வரும் நாட்களில் மேலும் சிலர் விலகுவார்கள். என அவர் தெரிவித்தார்..

இப்படி செல்வாக்கு படைத்தவர்கள் முதல் ஒன்றுக்கும் உதவாதர்கள் வரை கமலை தூற்ற துவங்கிவிட்டனர்.

சோதனை எலிகள் பாதிக்கப்பட்டதால் கண்டுபிடிப்புகள் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால் கண்டுபிடிப்பு,சோதனை எலிகள் மற்றும் கண்டுபிடிப்பாளன் என மூன்று தரப்பும் தோல்வியடைந்தது இந்த மையத்தில் தான்.


SHARE

Related posts

Leave a Comment