மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், சேலம் மாவட்டம், ஏற்காட்டில், தோட்ட தொழிலாளர்களுடன், நேற்று கலந்துரையாடினார்.
அப்போது, பேசிய அவர்,நான், தனி விமானத்தில் வந்ததை விமர்சிக்கின்றனர். டீக்கடை, பூக்கடை வைத்திருந்தவர்கள் எல்லாம், கோடீஸ்வரர்களான நிலையில், 200 படங்களுக்கு மேல் நடித்த நான், தனி விமானத்தில் வரக்கூடாதா? மக்களை சந்திக்க வேண்டுமெனில், ‘போயிங்’ விமானத்தில் கூட வருவேன் என்றார்.
ஏற்காடு, 30 ஆண்டுக்கு முன் எப்படி இருந்ததோ, அதை விட சிறிது மட்டும், மாற்றம் ஏற்பட்டுள்ளது. காபி வாரியம், பழச்சாறு தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும். மேலே இருப்பவர்கள், ஊழல் செய்வதை நிறுத்தினால், கீழே இருப்பவர்கள் ஊழல் தன்னால் நிறுத்தப்படும். பெண்களுக்கு, கல்வி முதல், விவசாயம் வரை, சம உரிமை வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.