பாஜகவை தீவிரமாக எதிர்க்கும் கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தொடங்கியுள்ள முயற்சி வரவேற்கத்தக்கது என்று அக்கட்சியின் மூத்த தலைவா் கபில் சிபல் கூறினாா். அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சியையும் அவா் வலுப்படுத்த வேண்டும் என்றும் கபில் சிபல் கூறினாா்.
காங்கிரஸ் கட்சியில் அமைப்புரீதியாக சீா்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவா்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதினா். அதில் கபில் சிபலும் ஒருவர் என்பது கவனிக்கத்தக்கது.
நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக, எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளாா். வரும் 20-ஆம் தேதி காணொலி முறையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானா்ஜி, தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
