கர்நாடகாவில் ஒரேநாளில் அதிக அளவாக 9,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று சற்று குறைந்து வந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நோய் தொற்று உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,950 ஆக உயர்ந்துள்ளது.
இதே போன்று ஆந்திராவில் இன்று ஒரே நாளில் மேலும் 10,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.