கொரோனா-கேரளாவில் அதிகரிப்பு, தமிழகத்தில் மிக குறைவு.

SHARE

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,516 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்முலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,16,751 ஆக அதிகரித்துள்ளது. 
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 3,859 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,79,377 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 35 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,018 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 668 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 9-வது நாளாக ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. 
தமிழகத்தில் இன்று மட்டும் 72,433 கொரோனா மாதிரிகளும், இதுவரை 97,32,863 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு 26,356 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது அந்த மாநிலமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மேலும் 8,790 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment