கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 5 பேரில்,மூன்று பெண்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம்

SHARE

கேரள மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகளில் தற்போது மூன்று பெண்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்தது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நன்னத்துகாவு என்ற பகுதியை சேர்ந்தவர் பிரேம் குமார். இவரது மனைவி ரமா தேவி. கடந்த 1995 ம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ம் தேதி ரமாதேவிக்கு ஒரே பிரசவத்தில் நான்கு பெண்கள் ஒரு ஆண் என ஐந்து குழந்தைகள் பிறந்தனர். கேரளாவின் உத்ர மாதத்தில் குழந்தைகள் பிறந்ததால் அவர்களுக்கு உத்தாரா, உத்தமா, உத்ரா, உத்ரஜா, மற்றும் உத்ராஜன் என பெயரிடப்பட்டது. மேலும் மாநிலத்தின் அனைத்து பத்திகைகளிலும் பரபரப்பான செய்தியாக அப்போது வெளிவந்தது. அதுமட்டுமல்லாது இக்குழந்தைகளுக்கு பஞ்சரத்னம் எனபெயரிட்டது.

கடந்த 2005 ம் ஆண்டில் பிரேம் குமார் தற்கொலை செய்து கொண்ட பின்னர் ரமா தேவிக்கு உள்ளளூர் மக்கள் ஆதரவு அளித்தனர் குழந்தைகளை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு குடியிருக்க வீடு கட்டிதரப்பட்டு அந்தவீட்டிற்கு பஞ்சரத்னம் என் பெயரிடப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க தனியார் கல்வி நிறுவனம் முன்வந்தது. இதன் மூலம் குழந்தைகள் கல்வி முதல் அனைத்து துறைகளிலும் வெற்றி வாகை சூடினர்.

தற்போது 25 வயது பூர்த்தியாக உள்ள நிலையில் அவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. ஆடைவடிவமைப்பாளரான உத்ரா மஸ்கட்டில் ஓட்டல் மேனேஜராக பணி புரிந்து வரும் அஜித்குமாரையும், ஆன்லைன் பத்திரிகையாளரான உத்தாரா வீடியோ பத்திரிகையாளர் கே.பி.மகேஷ்குமாரையும், மயக்கவியல் தொழில் நுட்ப வல்லுநராக உள்ள உத்தமா மஸ்கட்டில் கணக்காளராக உள்ள வினித்தை திருமணம் செய்து கொண்டனர். நான்காவது மகளுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது.ஆனால் மணமகன் வெளிநாட்டில் மாட்டிக் கொண்டதால் அவருடைய திருமணம் பிறகு நடைபெறும் என ரமா தேவி கூறினார்.

கிருஷ்ணரின் தீவிர பக்தையான ரமாதேவியின் விருப்பப்படி குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணவிழாவில் உத்ரஜா, உத்ராஜன்மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். மாநிலத்தில் உள்ள அனைத்து பத்திரிகைகளும் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தின. திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.


SHARE

Related posts

Leave a Comment