அதிகாரத்தை தங்கையிடம் ஒப்படைக்க வட கொரியா அதிபர் முடிவு

SHARE

News asia Exclusive

வட கொரியாவின் தலைவர், கிம் ஜாங்க் உன், உடல் நிலை குறித்தும் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன் பல்வேறு செய்திகள் வெளியானது.

அவர் இறந்துவிட்டதகாவும் செய்திகள் வந்தன. இந்த நிலையில் கடந்த மே மாதம் பியோங்யாங் நகரில் , பிரம்மாணட உர தொழிற்சாலை திறப்பு விழாவில் கிம் ஜாங் உன், தனது சகோதரியுடன் கலந்து கொண்டார்.

இந்நிலையில் ஆட்சியில் தனது சகோதரி கிம் யோ ஜாங்க், என்பவருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான புதிய கொள்கையை அறிவித்து தனக்கு இருக்கும்அதிகாரத்தை கிம் யோ ஜாங்கிற்கு பகிர்ந்து கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அவரது உடல் நிலை மோசமாக உள்ள நிலையில் தற்போது அவரது சகோதரி தான் நிர்வாகத்தை கவனித்து வருவதாகவும் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. 36 வயதே ஆன அதிபர் கிம் உன் உடல் பருமன்,நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் பாதிப்பால் இயங்க முடியாத நிலையில் உள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அவரது காலில் நடந்த அறுவை சிகிச்சை காரணமாக அவர் உடல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. தற்போது பொறுப்புகளை கவனித்து வரும் அவரது சகோதரி கிம் யோ ஜாங்க் 31 வயதே நிரம்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE

Related posts

Leave a Comment