அடங்கா தலைவன் – 30 லட்சம் தடுப்பூசியை நிராகரித்தார் கிம் ஜாங் உன்

SHARE

உன். உலகம் முழுவதும் கொரோனா பரவிய நிலையில், வடகொரியாவில் மட்டும் யாருக்குமே தொற்று இல்லை என சொல்லி ஆச்சரியமூட்டியவர் கிம் ஜாங் உன். இதுவரை வடகொரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டதா இல்லையா என்பதே மர்மமாக உள்ளது.

தற்போது, எல்லா நாடுகளும் கொரோனா தடுப்பூசி போதாமல் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கிம் ஜாங் உன் தனது நாட்டிற்கு கிடைத்த 30 லட்சம் தடுப்பூசியை புறக்கணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏழைநாடுகளுக்குத் தடுப்பூசியை இலவசமாக வழங்கும் வகையில் ஐநா அமைப்பு, கோவேக்ஸ் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சீன நிறுவனத்தின் 30 லட்சம் தடுப்பூசிகளை, வடகொரியா ஏற்க மறுத்துள்ளது. ‘கொரோனாவை எங்க ஸ்டைலில் விரட்ட எங்களால் முடியும். தடுப்பூசிகளுக்கான தேவை அதிகமுள்ள நாடுகளுக்கு அந்த தடுப்பூசிகளை தந்துவிடுங்கள்’ என கிம் ஜாங் உன் கூறி உள்ளார்.

சர்வதேச நாடுகள் தலைவர்களை தொடர்ந்து மருத்துவ மாபியாக்களுக்கும் சிம்ம சொப்பனமாக கிம் ஜாங் உன் திகழ்வதாக தடுப்பூசிக்கு எதிரானவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


SHARE

Related posts

Leave a Comment